உத்தர பிரதேசத்தின் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் கத்ரா கேசவ் தேவ் கோயில் இருந்தது என்றும், இந்த கோயில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த இடத்தின் ஒரு பகுதியில் தற்போதுள்ள ஷாயி ஈத்கா மசூதி அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாகவும் மீதமிருந்த பகுதியில் புதிதாக கிருஷ்ணஜென்மபூமி கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமியர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து, கத்ரா கேசவ் தேவ் கோவிலுடன் பகிர்ந்து கொள்ளும் 13.37 ஏக்கர் வளாகத்தில் இருந்து மசூதியை அகற்றக் கோரி இந்துக்கள் வழக்குகள் தொடர்ந்தனர். இந்நிலையில், இந்துக்கள் தொடர்ந்த வழக்குகளுக்கு எதிராக இஸ்லாமியர் தரப்பு தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.