அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. அயோத்தி கோவிலில் விரைவில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் ராமபிரானின் திருவுருவ சிலையுடன், ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டளையானது சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமி ஆசியுடன் தனது தீர்த்த யாத்திரையை தொடங்கியுள்ளது. இதில் பாரதத்தின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் ராமபிரானின் திருவுருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனித பெட்டகம் சிறப்பு ரத்தத்தில் தமிழகத்தில் தன் பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்த பயணத்தில் புனித பெட்டகமானது ஒருகோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபட்ட பிறகு ராமஜென்மபூமி குடமுழுக்கின்போது அயோத்தி சென்றடையும். திறப்பு விழாவை தொடர்ந்து 90 நாட்களில் 108 நிகழ்ச்சிகள் நடத்த ராமாமிர்த தரங்கிணி அறக்கட்டளை திட்டமிட்டு வருகிறது.