தி கேரள ஸ்டோரிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக போராளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்பாவி பெண்கள் மூளைசலவை செய்யப்பட்டு இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். அதன்பின், அவர்கள் தவறான பாதைக்கு திருப்படுகின்றனர் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ’தி கேரளா ஸ்டோரி’. இப்படத்திற்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., வி.சி.க. மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, ’தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், இப்படம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்ததாவது ; இந்த படத்திற்காக எத்தனை மனுக்கள்தான் தாக்கல் செய்வீர்கள். படத்தின் தயாரிப்பாளர், அதில் நடித்த நடிகர்கள் குறித்தும் எண்ணிப் பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டிப்புடன் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழக போராளிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.