அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் சுமார் 183 ஏக்கர் பரப்பளவில் மஹந்த் சுவாமி மகாராஜின் 90 வது பிறந்தநாளையொட்டி பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் என்கிற மிக பிரம்மாண்டமான ஹிந்து கோவில் அக்டோபர் 8 ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலானது உலகிலேயே இரண்டாவது பெரிய இந்து கோவில் மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவில் சமுதாயத்திற்காக, மனித நேயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது,” என்று மூத்த BAPS தலைவரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான ஞானவத்சல்தாஸ் சுவாமி, கூறினார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கோவிலின் கட்டுமானப்பணியானது, தற்போது வரை அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12 ஆயிரதிற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் நன்கொடை வழங்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 10 ஆயிரம் சாமி சிலைகள், 1 பெரிய கோவில் மற்றும் 12 துணைக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில் வருகிறது 18 ஆம் தேதி பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.