தஞ்சையில் சில தினங்களுக்கு, முன்பு. அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. ’மோகன்’ தலைமையிலான போலீசார் ஊரடங்கை. மதிக்காத நபர்களுக்கு கடுமையான, எச்சரிக்கை மற்றும் அபராதம் விதித்து வந்தார். அப்போது அங்கு வந்த லோடு, ஆட்டோவுக்கு எஸ்.ஐ. மோகன் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். லோடு ஆட்டோவில் வந்தவர்கள் தி.மு.க. நகர துணை செயலர் நீலகண்டனுக்கு போன் செய்துள்ளனர்.
சில நிமிடங்களில் தனது ஆதரவாளர்களுடன், அங்கு வந்த நீலகண்டன் ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை உடனே ரத்து செய்ய வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தி.மு.க நிர்வாகியோடு வாக்குவாதம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கழக கண்மணி ஒருவர் பெண் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதி தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்று கொண்டு இருந்தது. தி.மு.க-வை சேர்ந்த பொங்கலூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி என்பவர் தனது நண்பர்களுடன் குடிபோதையில் காரில் வந்துள்ளார்.
காரை நிறுத்தி வாகன சோதனை செய்த பொழுது. முக கவசம் அணியாமல் அமர்ந்திருந்த ரவியிடம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஏன்? தேவையில்லாமல் வெளியே சுற்றுகிறீர்கள் என்று கேட்டுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் கோமதி. குடிபோதையில் இருந்த தி.மு.க பிரமுகர் ரவி. “நாங்க ஆட்சிக்கு வந்துட்டோம்.
கேஸ் போடறதுனா போட்டுக்கோ” என்று தனது வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் காவலர்களுக்கே இந்த நிலைமை என்றால். தமிழக மக்களின் நிலை எவ்வாறு இருக்குமோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.