“அநீதியைக் கண்டு ரத்தம் கொதிக்கவில்லையென்றால் உள்ளே ஓடுவது ரத்தமல்ல வெறும் தண்ணீர்!”
என்று முழங்கியவர் ஆங்கிலேயனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்
சந்திரசேகர் ஆசாத் .சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 15 வயதிலேயே சிறை சென்றார். பெயரென்னவென்று அதிகாரி கேட்டபோது மேஜிஸ்டிரேட்டிடம் ‘பெயர் ஆஸாத் அதாவது சுதந்திரம் வசிப்பிடம் சிறை ‘ என்றாராம். அப்போதிருந்து மக்கள் இவரை சந்திரசேகர் ஆசாத் என்றே அழைத்தனர். இயற்பெயர் சந்திரசேசர சீதாராம் திவாரி.
“தேச சேவைக்குப் பயன்படாத இளைஞனின் வாழ்வு வேறு எதற்குமே பயனற்றது” என்பதே
ஆசாதின் கருத்து. வெறும் இருபத்தைந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஆஸாத்
ககோரி ரயில் கொள்ளை , லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழி தீர்க்க ஜான் ஸாண்டர்ஸ் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தியது , வைஸ்ராய் பயணித்த ரயில் மீது வெடிகுண்டு வீசியது என பெரும் புரட்சியாளராக விளங்கினார். ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன்’ புரட்சிப் படையை புனர்நிர்மாணம் செய்தார்.
இறுதியில் ஆங்கிலேயனிடம் பிடிபடக்கூடாதென்று முடிவுசெய்து
1931 பிப்ரவரி 27ம் நாள் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
அவரது நினவைப் போற்றுவோம்!
வந்தே மாதரம்!
திருமதி.பிரியா ராம்குமார்