சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில், மாநகராட்சியுடன் இணைந்து தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் செயல்படும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 130 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை மேயர் பிரியா வழங்கினார்.
மேயர் பிரியா அவர்கள் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும்போது கூட உடனே தனது கைபேசிக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிக்கொண்டிருந்தார். பதக்கங்களை வழங்காமல் அலட்சியமாக போனில் பேசியது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதக்கங்களை வழங்கிவிட்டு பொறுமையாக அதன்பிறகு பேசியிருக்கலாமே ? உடனே கைபேசியை எடுத்து பேசும் அளவிற்கு அப்படி என்ன அவசர அழைப்பு வந்துவிட்டது ? இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெறிவித்துள்ளனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் மேயர் பிரியாவின் இந்த செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. பதக்கங்களை வாங்க வந்தவர்களை காக்க வைத்து அவமானபடுத்துவதாக உள்ளது என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மேயர் பிரியாவை வறுத்தெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://x.com/karthikgnath/status/1750835175934882055?s=20