மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநி லங்களில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பாஜக தனிப் பெரும் பான்மையுடன் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித் துள்ளது.
அதேசமயம், இரு மாநிலங்களில் ஆட்சியை இழந்ததால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3-ஆக குறைந்துவிட்டது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா பேரவைத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. இதில் மத் திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை தோற்கடித்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.
பாஜகவின் தற்போதைய வெற்றிகளைத் தொடர்ந்து, அக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர மகாராஷ்டிரம் உள்ளிட்ட 4 மாநிலங்க ளில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
நாட்டில் இரண்டாவது பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 3-ஆக (கர்நாடகம், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா) குறைந்துள்ளன. தமிழகம், பிகார் மற்றும் ஜார்க்கண்டில் ஆளும் கூட்ட ணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. வட இந்தியாவில் இப்போது ஹிமாசல பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
நாட்டில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசியக் கட்சிகள் உள்ளன. தில்லி, பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, மூன்றாவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளதால், வட இந்தியாவில் இரு மாநிலங்களில் (தில்லி, பஞ்சாப்) ஆட்சியில் உள்ள முக்கிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளதாக அக்கட்சி மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சிக்கிம், அருணா சல பிரதேசம், ஒடிஸா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆளும் மாநிலங்கள் :-
- உத்தர பிரதேசம்
- உத்தரகண்ட்
- ஹரியாணா
- குஜராத்
- கோவா
- அஸ்ஸாம்
- திரிபுரா
- மணிப்பூர்
- அருணாசல பிரதேசம்
- மத்திய பிரதேசம்
- ராஜஸ்தான்
- சத்தீஸ்கர்
பாஜக கூட்டணி
ஆளும் மாநிலங்கள் :-
- மகாராஷ்டிரம்
- மேகாலயம்
- நாகாலாந்து
- சிக்கிம்
காங்கிரஸ்
ஆளும் மாநிலங்கள் :-
- ஹிமாசல பிரதேசம்
2.கர்நாடகம்
- தெலங்கானா