மது போதையினால் கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது – நாராயணன் திருப்பதி காட்டம் !

மது போதையினால் கொலைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது – நாராயணன் திருப்பதி காட்டம் !

Share it if you like it

மது போதையினால் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டு சில தரவுகளையும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :

இவை அனைத்துமே ஊடகங்களில் வெளி வந்த செய்திகள் :-

  1. போதையில் தகராறு வண்டலூரில் இளைஞர் அடித்துக் கொலை : தினகரன். மார்ச், 04, 2024.
  2. ஜனவரி 17, 2024, ‘தினமணி’ : மது குடிக்க பணம் கேட்டு தராததால் இலைஞர் குத்திக் கொலை.
  3. ஜனவரி 6,2024, வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை.
  4. பிப்ரவரி 20,2024 : கிருஷ்ணகிரியில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கிரிக்கெட் பேட்டாலேயே அடித்து கொலை செய்தனர்.

5.ஜனவரி 29, 2024, அணைக்கட்டு அருகே போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அடித்து கொன்றார் நண்பர்.

6.ஜனவரி 14,2024, சென்னை : உறங்கிக் கொண்டிருந்த தன்னை தட்டி எழுப்பி மது கேட்ட குடிமகன் மீது அந்த டாஸ்மாக் ஊழியர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.

  1. பிப்ரவரி 22, 2024, உசிலம்பட்டி : மது போதையில் தகராறு – பெரியகருப்பன் கத்தியால் குத்தியதில் பாண்டி படு கொலை.
  2. பிப்ரவரி 14, 2024, ஊட்டி : ஊட்டியில் மதுவுடன் சேர்த்து போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி இறந்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.
  3. பிப்ரவரி 5,2024, மதுரை : “அடிச்ச போதை பத்தலை, காசு கொடு” – தாயை கொடூரமாக அடித்தே கொன்ற மகன்.

இந்த வருடம் அதாவது 60 நாட்களில் நடைபெற்ற மது போதையினால் நடைபெற்ற கொலைகளில் இது ஒரு உதாரணம் தான். ‘டாஸ்மாக்’ கடைகளில் விற்பனையாகும் மதுவை அருந்தி (கள்ளச்சாராயம் இல்லை) போதையாகி, பின்னர் அதன் விளைவாக நடந்தேறும் கொலைகளின் சிறு உதாரணமே இது. இவை அனைத்துமே ஊடகங்களில் வெளி வந்த செய்திகள்.

இது தான் ‘திராவிட மாடல்’. இவ்வாறு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *