சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வயதான ரசிகர் ஒருவர் சிவக்குமாருக்கு பொன்னாடை அணிவிக்க தான் கொண்டு வந்த பொன்னாடையை சிவக்குமாருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவிக்க முயன்றார். அப்பொழுது அதை தடுத்து பொன்னாடை வாங்கி தூக்கி வீசி விட்டு சென்றார். இதனால் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார் தொடர்ந்து பொது இடங்களில் நடிகர் சிவக்குமார் கோபமாக நடந்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மிகவும் ஆசையாக பொன்னாடை அணிவிக்க வந்த முதியவர் மீது ஏன் இவ்வளவு வன்மத்தை காட்ட வேண்டும். எளிமையாக வேண்டாம் என்று கூறி மருந்திருக்கலாம். ஒரு பொது மேடையில் நாகரிகமாக நடந்து கொள்ள தெரியாதவரை சிறப்பு விருந்தினராக அழைப்பது ஏன் ? நடிகர் சிவகுமார் இவ்வாறு நடந்து கொள்வது முதல் முறை அல்ல. முன்னதாக ரசிகர் ஒருவர் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றபோது அலைபேசியை தட்டி விட்டு சென்றது பெரும் சர்ச்சையானது. இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.