சமூக வலைதளத்தில் யானை தொடர்பான காணொளி ஒன்று மிக அழகாக வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் கோவையில் காட்டு பகுதியில் இருந்து யானை ஒன்று மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. மக்களையோ அல்லது சின்ன சின்ன பிராணிகளையோ கூட பயமுறுத்தாமல் மிகவும் அழகாக அன்ன நடை போட்டுக்கொண்டு சென்றது. இதனை கண்டு மக்களும் பயப்படாமல் இருந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் யானையை பார்த்து “கணேசா கம்முன்னு போ”, “விநாயகா அமைதியா போ” “போடா சாமி” போடா கணேசா”, என்று சொல்லவும் மிகவும் அமைதியாக அந்த யானை யாரையும் விரட்டாமல் பயமுறுத்தாமல் சமத்தாக காட்டுக்குள் சென்றது. இதுதொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
