காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா இந்தியர்களை சர்ச்சைக்குரிய வகையில் அவமதித்த சம்பவத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் காங்கிரசிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்று பிட்ரோடா பேசிய தோல் நிறம் குறித்த கருத்து நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிட்ரோடாவின் கருத்து குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தனது கண்டனத்தைத் தெரிவித்தனர்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சாம் பிட்ரோடா, ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் யுபிஏ (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) அரசு ஆட்சி அமைத்த போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், பிட்ரோடாவை இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக ஆக்கினார். கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பொது உள்கட்டமைப்புக்கான ஆலோசகராக இருந்தார்.
சாம் பிட்ரோடா பேசியது என்ன ? – பேட்டி ஒன்றில் 75 ஆண்டுகளாக இந்தியர்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று தெரிவித்த சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சி நாட்டை வேற்றுமையிலும் ஒற்றுமையாக வைத்திருந்தது என்று தெரிவித்தார். அதுகுறித்து விரிவாகக் கூறும்போது, “அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்த சண்டைகளைத் தவிர்த்து நாங்கள் அனைவரும் 75 ஆண்டு காலம் மகிழ்ச்சியான சூழ்நிலையில் வாழ்ந்திருக்கிறோம்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டை எங்களால் ஒற்றுமையாக வைத்திருக்க முடியும். கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களைப் போல தோற்றமளிக்கலாம், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடகில் உள்ள மக்கள் ஒருவேளை வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கலாம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள். வெவ்வேறு மொழிகள், மதங்கள், உடைகள், வெவ்வேறு உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் மதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, சாம் பிட்ரோடாவின் வீடியோ பேச்சு ஒன்று சர்ச்சையானது. அதில் அவர், “அமெரிக்காவில் பாரம்பரை சொத்து வரி சட்டம் அமலில் உள்ளது. உதாரணமாக ஒருவரிடம் 10 கோடி டாலர் மதிப்பிலான சொத்துஇருந்தால், அவர் உயிரிழக்கும்போது 55% சொத்தை அரசு எடுத்துக் கொள்ளும். மீதமுள்ள 45% சொத்துகளை மட்டுமே அவருடைய வாரிசுகள் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும். இது ஒரு நல்ல சட்டம். இது எனக்கு நியாயமாக தெரிகிறது.
ஆனால், இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. இது குறித்து பொதுமக்கள் விவாதிக்க வேண்டும்” என பேசியிருந்தார். இவரது இந்தக் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த தோல் நிறம் குறித்த பேச்சு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவ்வப்போது தொடர்ந்து நமது பாரத நாட்டை அவமரியாதை செய்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வரும் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவை ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக மீண்டும் நியமித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, சுமார் ஒன்றரை மாதத்தில் மீண்டும் இந்த பதவிக்கு வந்துள்ளார் சாம் பிட்ரோடா.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்ற நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது வேறுபாடுகளைக் கொண்ட தனி நபர்களிடையே இருக்கும் சில ஒருமைப்பாட்டைக் குறிக்கும் கருத்து. இந்த வேறுபாடுகள் கலாச்சாரம், மொழி, சித்தாந்தம், மதம், பிரிவு, வர்க்கம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் இருக்கலாம்.
பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்பட்டு வருகின்றன. இந்த இணைவுதான் இந்தியாவை கலாச்சாரத்தின் தனித்துவமான இடமாக மாற்றியுள்ளது. எனவே, இந்தியா என்பது ஒரு ஒருங்கிணைந்த கலாச்சார முழுமையின் கட்டமைப்பிற்குள் பன்முக கலாச்சார சூழ்நிலைகளின் பிரதிநிதித்துவம் ஆகும்.
ஒரு நாட்டில் பல்வேறு வகையான மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மொழி, சமயம், கலாச்சாரம், இனம் என வேறுபட்டவர்களாக காணப்படுகின்றனர். இருந்தாலும் இந்த மக்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும். இந்தியர்கள் என்ற ஒரு உணர்வு இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்றது எனலாம்.
இப்படிப்பட்ட பன்முகத்தன்மை வாய்ந்த நமது பாரத மக்களை கொச்சைப்படுத்தி பேசியவருக்கு மீண்டும் காங்கிஸில் சேர்த்துக்கொண்டு பதவி கொடுப்பது நியாயமா ? நமது பாரத மக்களை விட சாம் பிட்ரோடா தான் காங்கிரசுக்கு உயர்ந்தவரா என்கிற கேள்வி எழுகிறது.