புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்து ஒன்றரை வருடம் மேலாகி விட்டது. ஆனால் இன்னும் திமுக அரசினால் அந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் குடிநீர் தொட்டிகளுக்கு பூட்டுப் போட்டு பாதுகாக்க உத்தரவு பிறப்பித்துள்ளார், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலர் செந்தில்குமார்.
இதனை விமர்சித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, அதாவது, குடிநீர் தொட்டியில் யார் மலம் கலந்தார்கள்? யார் மலம் கலக்கிறார்கள்? என்ற கேள்வியின் விடைக்கு, புலனாய்வுக்கு ‘பூட்டுப் போடும்’ உத்தரவு! வெட்கம், கேவலம், அவலம். ஜாதியை ஒழித்து விட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ‘திராவிட மாடல்’ அரசியலின் அலங்கோலம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.