பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.
கிறிஸ்தவரான அந்த நபர், இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஜரன்வாலா நகரில் அமைந்திருந்த கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் தேவாலயங்களுக்கு தீயிட்டனர். குர்ஆன் நூலின் சில பக்கங்களை கிழித்தது, அதனை தரையில் போட்டு அவமதித்து, மற்ற பக்கங்களில் அவதூறான கருத்தை எழுதிய செயலுக்காக கிறிஸ்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.
இந்த சூழலில் எஹ்சான் ஷான் என்ற நபருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட குர்ஆன் பக்கங்களை தனது டிக்-டாக் கணக்கு பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். அதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதற்காக அவருக்கு தற்போது பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த சூழலில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக பல அட்டூழியங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில் முஸ்லீம்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். சிறுபான்மை மக்களைத்தான் திமுக அரசு விழுந்து விழுந்து கவனிக்கிறது.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் 2019 அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் சராசரியாக 1000க்கும் மேற்பட்ட கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுவதாக கூறுகிறது.”
2020 டான் (Dawn) பத்திரிகையின் அறிக்கையின்படி, “2013 முதல் 2020 வரையிலான தரவுகளை பார்க்கும்போது அனைத்து மாகாணங்களில் உள்ள சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டுகிறது”.
2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கான்பூர் பகுதியில் எட்டு வயது ஹிந்து மதத்தை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். 2017ஆம் ஆண்டு 14 வயது ஹிந்து மதத்தை சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் இந்த சம்பவங்களை மூடி மறைக்கத்தான் பார்க்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 5,000 இந்துக்கள் மத துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக பாகிஸ்தான் அறிக்கை ஒன்று சொல்கிறது.