வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்தனர். இதனால் ஆற்றில் பள்ளம் அதிகமான நிலையில் இளைஞர் ஒருவர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது பள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் கடுங்கோபத்தில் இருந்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் ஆற்றில் மணல் அள்ள லாரி ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவர்களை மணல் அள்ள விடாமல் உடனடியாக லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் போராட்டம் செய்த இளைஞர்களில் ஒருவரை அடித்து இழுத்து ஜீப்பில் ஏற்றி சென்றுள்ளனர். அதன்பிறகு காவல் நிலையத்தில் அந்த இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியுள்ளார்.