மத்திய பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன் தினம் சென்றார். இரண்டாவது நாளான நேற்று காலை ஜனாதிபதி உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோயிலில் மனதார இறைவனை தரிசித்தார். தரிசனம் செய்து விட்டு ஜலாபிஷேகம் செய்தார்.கோவிலுக்கு சென்று கோவிலில் வழிபாடு செய்ததோடு, மட்டும் அல்லாமல் கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு கோவில் வளாகத்தையும் சுத்தம் செய்தார்.
கோவிலின் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளை ஜனாதிபதி பார்த்து வியப்படைந்தார். மேலும் கோவிலின் கட்டுமான பணிகளையும், அங்கு நிறுவப்பட்ட கைவினைப் பொருட்களையும் அவர் பாராட்டினார். சிற்பிகளால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் மிகச்சிறப்பானவை என ஜனாதிபதி தெரிவித்தார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிற்பிகளுடன் கலந்துரையாடினார்.