ஏர்செல்-ன் முன்னால் தலைவர் சி.சிவசங்கரன் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்கள் நிறுவனம் ஏன் மூடப்பட்டது என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிவசங்கரன் சில அரசியல்வாதிகள் எனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். அந்த அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் எனது நிறுவனத்தை குறைவான தொகைக்கு விற்றுவிட்டேன் என்று கூறினார்.
இதனை அடுத்து எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, அதற்கு சிவசங்கரன். 1400 கோடிக்கு விற்றேன். தற்போது விற்று இருந்தால் 8 பில்லியன் அளவுக்கு சென்றிருக்கும் என்றார். 10 வருடத்திற்கு முன்னால் இருந்த அழுத்தம் தற்போது சுத்தமாக இல்லை. தற்போது யார் வேண்டுமானாலும் சுலபமாக தொழில் செய்யலாம். அந்த அளவிற்கு சுதந்திரம் உள்ளது என்று கூறினார்.
10 வருடத்திற்கு முன் என்றால் காங்கிரஸ் ஆட்சி தான் இருந்தது. தற்போது மோடி ஆட்சி உள்ளது. அப்படி என்றால் சிவசங்கரன் மறைமுகமாக காங்கிரஸ் ஆட்சியில் தான் தனக்கு அழுத்தம் இருந்ததாகவும், தற்போது மோடி ஆட்சியில் அந்த அழுத்தம் இல்லை என்றும் கூறுவதாக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.