திட்டம் பாரதப் பிரதமருடையது ஆனா ”ஸ்டிக்கர்” எங்களுடையது அமைச்சரின் புது காமெடி.!

திட்டம் பாரதப் பிரதமருடையது ஆனா ”ஸ்டிக்கர்” எங்களுடையது அமைச்சரின் புது காமெடி.!

Share it if you like it

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்றவுடன், உற்பத்தி துவங்கும்.அதன்பின், பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து தடுப்பூசி வழங்கும் நிலை ஏற்படும் என திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்தது மக்களை நகைப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

காரணம், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிலையம் தொடர்பாக கடந்த பல மாதங்களாக மத்திய அரசு முனைப்புக்காட்டி, அதில் உற்பத்தியை துவங்க தேவையான அணைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடந்த ஜனவரி 9 ம் தேதியே நேரில் வந்து விவரங்களை சேகரித்தது அனைவரும் அறிந்த விஷயமே.

இவற்றுக்கெல்லாம் மேலாக அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், அங்கு உற்பத்தியை துவங்குவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் இப்படி தங்கள் அரசுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத ஒரு விஷயத்துக்கு ஏதோ தானே கஷ்டப்பட்டு முயற்சி செய்து நடத்தி முடித்து போல் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் வேலையை திமுக அரசு செய்கிறது. அதனை மேலும் உறுதிப்படுத்துவது போல் அமைச்சர் சுப்ரமணியத்தின் அறிக்கை அமைந்துள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it