கோவை ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் மறைவிற்கு இரங்கலை தெரிவித்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் !

கோவை ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் மறைவிற்கு இரங்கலை தெரிவித்த ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் !

Share it if you like it

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் மறைவிற்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென் தமிழகத் தலைவர் திரு ஆடலரசன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது :-

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு கோவையில் காமாட்சிபுரி ஆதீனத்தை உருவாக்கி இறை பணியோடு சமூகப் பணியையும் மேற்கொண்டு வந்தவர் தவத்திரு காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள்.

கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்து உள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லங்களை நடத்தி வந்த சுவாமிகள், இந்து சமுதாயத்திற்கு பிரச்சனைகள் வரும் போது நேரடியாக களத்தில் இறங்கி போராடவும் தயங்காதவர்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்த சாக்த் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் திடீர் இழப்பு இந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் பக்தர்கள், ஆதீனத்தை சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூஜ்ய ஸ்வாமிகளின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பார பிரார்த்தனை செய்கிறேன்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *