தஞ்சாவூரில் உள்ள நாஞ்சி கோட்டையில் உள்ள ஒரு குடியிருப்பில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அந்த வீட்டின் உரிமையாளர் காலமானார். இதனால் மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் வந்தது. குடும்ப தலைவரை இழந்து குடும்ப கஷ்டத்தில் தவித்து வந்த குடும்பத்தினர் ரம்ஜானை கொண்டாட முடியாமல் சோகமாக இருந்தனர்.
இதனை அறிந்த அதே பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று பணம் திரட்டி கூடி ரம்ஜான் நாளில் இஸ்லாமிய குடும்பம் சோகத்தில் இருக்கக்கூடாது, மகிழ்ச்சியில் இருக்க வேண்டும் என கூறி, அவர்களுக்கு புது ஆடைகளையும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கு கொடுத்தனர். கணவர் இல்லைனு வருத்தப்படாதீங்க நாங்க இருக்கோம், என்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்கள். இதுமட்டுமல்லாமல் அந்த பகுதிக்கே டென்ட் கட்டி பிரியாணி போட்டுள்ளனர் ஹிந்துக்கள். இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அந்த இஸ்லாமிய குடும்பம் சென்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
https://x.com/polimernews/status/1778453280286187690