தனியார் விடுதியில் படிக்க கூடிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என ABVP தேசிய மாணவர் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக ABVP அமைப்பின் தென் தமிழக மாநில இணை செயலாளர் J.D.விஜயராகவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.
மதுரை மாநகரில் தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதலை ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
உரிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்ட தனியார் விடுதியினை நிரந்திரமாக மூடவும் விடுதி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது போன்று மாணவர்களின் உயிரிழப்புகளை தடுக்க மாநில அரசு மதுரை மாநகரில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் விடுதியின் பாதுகாப்பு உபகரணங்கள் செயல்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பது பற்றியும் உறுதி செய்யவேண்டும் என்று ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். மேலும் வெளியூர்களிலிருந்து படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வருகை தந்து விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவர்களின் நலம் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும், அனைத்து தனியார் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் அவர்களது குறைகளை அரசிடம் எடுத்து சொல்ல மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைப்பேசி எண் ஒன்றை வெளியிடவேண்டும் என்றும் ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தனியார் விடுதியில் படிக்க கூடிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.