திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் உள்ள மதுகாரம்பட்டி அருகே அரசு பேருந்தானது சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நிலை தடுமாறி சாலையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புசுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு செல்ல மாற்று பேருந்தும் இல்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதனால் தேர்வுக்கு எப்படி செல்ல போகிறோம் என்பதை செய்வதறியாது திகைத்த மாணவர்கள் நடந்தே சென்று பள்ளிக்கு சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில கிராமங்களில் உள்ள அரசு பேருந்துகள் மழை பெய்யும்போது பேருந்துக்குள் ஒழுகும் பேருந்துகளாகவும், உட்காரக்கூடிய இருக்கைகள் மிக மோசமாகவும் தான் உள்ளது.
ஸ்டாலின் அவர்கள் இலவச பேருந்துகளை இயக்குவதை விட நல்ல தரமான பேருந்துகளை வழங்கினால் காட்டில் மேட்டில் உழைத்து களைத்து போய் பேருந்தில் ஏறும் கிராம மக்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.