மங்களூருவில் உள்ள செயின்ட் ஜெரோசா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் பிரபா என்கிற ஆசிரியை பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற தலைப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாடத்திற்கு சம்பந்தமே இல்லாமல் ஹிந்து கடவுள்களையும், இதிகாசங்களையும் மற்றும் பிரதமர் மோடி அவர்களையும் தரக்குறைவாக விமர்சித்து மாணவர்களிடையே பேசியுள்ளார்.
ஹிந்துக்களின் கடவுள் மற்றும் இதிகாசங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆசிரியரின் கருத்துக்களைக் கண்டித்து, மாண்டியாவில் உள்ள கான்வென்ட் பள்ளிக்கு வெளியே பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்தினர்.
இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும், மாணவர்களின் மனதில் இந்து மதத்திற்கு எதிராக விஷமூட்டுவதாகவும், பிற மதத்தைச் சேர்ந்த மாணவர்களை மதமாற்றம் செய்ய சதி செய்ததாகவும், ஆசிரியர் மீது பெற்றோர் மங்களூரு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கல்வி அதிகாரி விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி ஆசிரியை மீது மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில் மங்களூருவில் உள்ள செயின்ட் ஜெரோசா ஆங்கில மனித வள ஆரம்பப் பள்ளியின் ஆசிரியை பிரபாவுக்கு எதிரான சலசலப்பு மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பள்ளி நிர்வாகம் ஒரு அறிக்கையில் ஆசிரியை பிரபாவை பணிநீக்கம் செய்ததாகவும், அவரது பதவிக்கு வேறொரு ஆசிரியரை நியமிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். “செயின்ட் ஜெரோசா பள்ளிக்கு 60 ஆண்டுகால வரலாறு உள்ளது, அதன் வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. நாங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுபவர்கள் மற்றும் அனைத்து மதங்களின் நம்பிக்கை மற்றும் நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறோம். இச்சம்பவத்தை கைவிடுமாறும், எதிர்கால முன்னேற்றத்திற்காக பள்ளியுடன் கைகோர்க்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று பள்ளித் தலைமையாசிரியை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
https://x.com/HateDetectors/status/1757080734098214950?s=20