அயோத்தி கோவிலுக்கு இதுவரை ரூ.11 கோடி காணிக்கை வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

அயோத்தி கோவிலுக்கு இதுவரை ரூ.11 கோடி காணிக்கை வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

Share it if you like it

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.

கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை அயோத்தி ராமர் கோவிளுக்கு ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, கடந்த 11 நாள்களில் மட்டும் கோயில் உண்டியல்களில் 8 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், காசோலைகள் மற்றும் இணையவழி மூலம் 3.50 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கோயில் கருவறையில் நான்கு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 11 வங்கிப் பணியாளர்கள் மற்றும் 3 கோயில் அறக்கட்டளை உறுப்பினர்களை உள்ளடக்கிய 14 பேர் கொண்ட குழு உண்டியல் நன்கொடை எண்ணிக்கையை நடத்துகிறது.

மேலும் அவர், நன்கொடையளிப்பதிலிருந்து எண்ணிக்கை நடைபெறுவதுவரை அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் நடைபெறுகிறது என தெரிவித்தார்.


Share it if you like it