திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வேப்பன்வலசு நோக்கி அரசு பேருந்து ஒன்று 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன் பக்கத்திலுள்ள டயர் கழன்று பேருந்தை விட்டு முன்னே சென்று அருகிலுள்ள சாக்கடையில் விழுந்தது. பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளுக்கு அடிபடாமல் காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் பல இந்த நிலைமையில் தான் உள்ளது. பேருந்திலிருந்து டயர் கழன்று ஓடுவது, பேருந்துகுள்ளே மழை பெய்வது, பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே பயணிகளின் இருக்கை கழன்று விடுவது, கியர் கம்பி கழன்று விடாமல் இருக்க பயணிகளை வைத்து பிடித்து கொள்ள வைப்பது. இதுபோல் சம்பவங்கள் அடிக்கடி தமிழகத்தில் நடந்த வண்ணம் உள்ளது.
வெறும் பேருக்கு மகளிருக்கு இலவச பேருந்து என்று சொல்லிவிட்டு அரசு பேருந்துகளை பரிசோதனை செய்யாமல் காலாவதியான பேருந்தை ஓட்டி மக்களின் உயிருடன் விளையாடி கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. இவ்வாறு திமுக அரசை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.