திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு போதிய வருமானம் இல்லை, வீடும் ஒரு சாதாரண ஒற்றை அறைவீடு இந்நிலையில் தனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் படிப்பதற்கான “ரீடிங் டேபிள்” இல்லாததால் படிப்பதற்கு சிரமமாக இருப்பதாக முகநூல் வழியாக கூறி இருந்தார். இதனை பார்த்த அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் உடனடியாக அச்சிறுமிக்கு தேவையான அனைத்தையும் உடனடியாக வாங்கித்தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிகாரிகளும் உடனடியாக அக்குடும்பத்தின் தேவையான மருந்துகள், மளிகை பொருட்கள், ரீடிங் டேபிள் என அனைத்தையும் வாங்கி தந்தனர். ஆனால் நம் மாநிலத்திலோ அதே போல் முகநூலில் பதிவிட்ட பெண்ணை திமுகவினர் நேரில் சென்று மிரட்டிய விவகாரம் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.