தேர்தல் நேரத்தில் பேருந்துகள் இல்லை : மக்கள் அவதி !

தேர்தல் நேரத்தில் பேருந்துகள் இல்லை : மக்கள் அவதி !

Share it if you like it

மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை முழுவதும் தேர்தல் நாளான நேற்று போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் நேற்று அருகில் உள்ள பகுதிகளுக்கு பேருந்தில் சென்று வாக்களிக்க முயன்றோரும், ஊழியர்கள் பணியாற்றும்இடங்களுக்குச் செல்ல முடியாமலும் அவதியடைந்தனர். குறிப்பாக வடபழனி பணிமனையில் போதிய பேருந்துகள் இல்லாததால் அங்குள்ள ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம்செய்து, பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற நிலை நிடித்தது.

இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, கடந்த 9ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்துக் கழகங்களில்காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதே நேரம், தேர்தலன்று வருவோருக்கு இரட்டை ஊதியம் தொடர்பான சரியான வழிகாட்டுதல் இல்லை என்றனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, 50 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போதும் தேவையான வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறோம் என்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *