திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிகூடம் சென்று வருவதற்கு 12 மணி நேரம் ஆகுவதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்மணி அளித்த பேட்டியில்,
எங்க ஊர்ல பஸ் வசதி எதுவுமே கிடையாது. அதனால எங்க புள்ளைங்க சைக்கிள்ல தான் போய்ட்டு வராங்க. காலையில 6.45 க்கு பள்ளிக்கூடத்துக்கு போறாங்க சாயங்காலம் 7.30 மணி மேல ஆயிரது வீட்டுக்கு வர.வர வழியில டாஸ்மாக் கடை எல்லாம் இருக்கு. அது சேப்டியும் கிடையாது. நாங்களும் மூனு முறை மனு கொடுத்துட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கல. எங்களுக்கு பஸ் வசதி கண்டிப்பா வேணும். பள்ளிக்கூடம் போய்ட்டு வர ஒவ்வொரு நாளும் பாதுகாப்பா வருவங்களானு வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கோம். நாங்களும் கஷ்டப்பட்டு தான் உழைச்சிட்டு வீட்டுக்கு வரோம். எங்க ஊருக்கு எந்த வசதியுமே இல்ல.கண்டிப்பா எங்க ஊருக்கு ஒரு வாரத்துக்குள்ள பஸ் வேணும். இத ஒண்ணுதான் நாங்க கோரிக்கையா வச்சிருக்கோம். இவ்வாறு அந்த பெண் ஆதங்கத்தோடு கூறினார்.
மேலும் பேருந்து வசதிக்காக மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார். இதுதொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா ?