கடந்த மாதம் திருவண்ணாமலையில் தன்னுடைய நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த கூடாது என்று அமைதியான வழியில் போராடிய பச்சயப்பன் உள்ளிட்ட 7 விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தில் திமுக அரசு கைது செய்தது. அதன்பிறகு விவசாயிகள் மற்றும் பாஜவினர் எதிர்ப்பினால் குண்டாஸ் சட்டத்தை ரத்து
செய்தது. அதிலும் 7 விவசாயிகளில் 6 பேரை மட்டும் விடுதலை செய்தது. அருள் என்கிற விவசாயியை மட்டும் விடுதலையும் செய்யவில்லை, குண்டாஸ் சட்டத்தையும் நீக்காமல் வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயி அருள் குண்டாஸ் ரத்து கோரும் வழக்கில் முதல் ஆணை வந்துள்ளது. தமிழக அரசு அருள் மேல் போட்ட குண்டாஸ் வழக்கு உள்நோக்கத்துடன் அருளை பழி வாங்க போடப்பட்டதாகவும் அவர் எந்த ஒரு தீவிர குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிப்காட் நில எடுப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் கேட்டுள்ளது. அரசுக்கு 2 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 அன்று வழக்கு விசாரணைக்கு வரும். நேற்றைய தினம் Preventive detention Advisory Board முன்பும் வழக்கு வந்தது. அதிலும் இந்த குண்டாஸ் உடனே ரத்து செய்ய கோரி அனைத்து ஆவணங்களும் சமர்பித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

