இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வாழ்க்கைப் பயணத்தை `I Have the Streets – A Kutti Cricket Story!’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் நடந்திருந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்நாட்டிற்கு அப்பால் ஒரு தொழிலை உருவாக்க விரும்பும் எவருக்கும் இந்தி கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நிறைய திறமையாளர்கள் இருந்தும் ஏன் இந்திய அணிக்கு ஆட முடியவில்லை எனக் கேட்பார்கள். அதற்கு நாம் ஏனைய இந்தியவோடு தொடர்பற்று இருப்பதுதான் முக்கிய காரணம்.
மெட்ராஸ் என்றால் என்ன, இந்த நிலத்தின் தன்மை என்னவென்பதை தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தமிழகத்திலிருந்து வருபவர்கள் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டும். சிறுவயதில் எனக்கு பெரிதாக ஹிந்தி தெரியாது. பாக்யராஜின் ‘ரகு தாத்தா’ ஹிந்திதான் தெரியும். ஆனால், ‘ஹிந்தி தெரியாது போடா’ என்பதை விட ‘ஹிந்தியே தெரியாது அதைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கஷ்டம்தான் கொடுக்கும்’ என்கிற மனநிலைக்கு வந்துவிட்டோமானால் சிறப்பாக இருக்கும்.
17 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சி முகாமில் இருந்தபோது ஹிந்தி தெரியாத என்னை ஐன்ஸ்டைனைப் போல பார்த்தார்கள். ஐன்ஸ்டைனை அவர்களுள் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதை அறியவே எனக்கு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்து வருபவர்களுக்கும் இவ்வளவு ஆண்டுகள் பிடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இவ்வாறு அஸ்வின் பேசினார்.
தமிழகத்தில் உள்ள மக்களை ஹிந்தி திணிப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்று ஹிந்தி கற்க விடாமல் அவர்கள் நடத்தும் பள்ளிகூடத்தில் மட்டும் ஹிந்தி கற்று கொடுப்பார்கள். திமுக வில் உள்ளவர்களும் திரைபிரபலங்களும் கூட அவர்கள் ஹிந்தி கற்றுக்கொண்டு பாலிவுட், கோலிவுட் என படத்தில் நடித்து கோடி கோடியை சம்பாதிப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்தி தெரியாது போடா என்று டீ சர்ட் போட்டுகொண்டு தமிழக மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஏஆர்.ரகுமான் ஹிந்தி படத்திற்கு இசை அமைத்து விருது வாங்குவார். தமிழ்நாட்டில் அவரின் மனைவி ஹிந்தியில் பேசினால் ஹிந்தியில் பேசாதே தமிழில் பேசு என்று வெக்கமே இல்லாமல் நாடகமாடுவார். இதனையும் இளைஞர்கள் கூட்டம் ஒன்று கைதட்டி ரசிக்கும்.
தி.மு.க.வும் அதன் ஆதரவாளர்களும் ஹிந்தி தெரியாதது போடா போன்ற பிரச்சாரங்கள் மூலம் ஹிந்தியைத் தடுக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர், மேலும் வடமாநில இந்தியர்களை ” வடக்கன்கள் “, “பானிபூரி விற்பவர்கள் ” என இழிவுபடுத்துகின்றனர். திமுக எம்பி தயாநிதி மாறனும் “இந்தி பேசுபவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது . திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார், இந்தி இதயப் பகுதியான மாநிலங்களை ” கௌமுத்ரா ” மாநிலங்கள் என்று குறிப்பிட்டார்.
“ஹிந்தி தெரியாது போடா” என்று சொல்வதில் கெத்து இல்லை. 33 மொழிகள் கற்று அதில் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழை பாராட்டிய பாரதிதான் கெத்து.