கடந்த சனிக்கிழமை அன்று ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைப்பெற்றது. அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணிகள் மோதி கொண்டன. அந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் இந்தியா வெற்றி பெற்ற மகிழ்ச்சியை ஜெய் ஸ்ரீ ராம் என்றும் பாரத் மாதா கீ ஜெய் என்றும் கோஷங்கள் எழுப்பி கொண்டாடியுள்ளனர். இவ்வாறு முழக்கமிட்டதற்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா அதன் விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. இருப்பினும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாதது. விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா வெற்றி பெற்றதற்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல கூட மக்களுக்கு சுதந்திரம் இல்லையா ? அவர்கள் என்ன பாகிஸ்தானுக்கு ஆதரவாகவா கோஷமிட்டார்கள் ஏன் இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார் என்று நெட்டிசன்கள் உதயநிதிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.