ஹிந்து கோவில்கள் பற்றி எந்தவிதமான புரிதலுமின்றி அவதூறு பேசி வரும் திருமாவளவன் போன்றவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்த திரைப்படம் அகண்டா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் தெய்வங்களை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். இதுதவிர, தி.மு.க ஆட்சியில் ஹிந்துக்கள் தங்களது வழிபாட்டு உரிமைகளை போராடி பெற வேண்டிய சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ராஜன், பக்ரீத் பண்டிகைகளுக்கு அதிக முன்னுரிமை. அதே போல, கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டன. ஆனால், ஹிந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு கொரோனா தொற்றை காரணம் காட்டி பல தடைகளை ஏற்படுத்தியது இந்த அரசு. இப்படியாக, தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஹிந்துக்களுக்கு எதிராகவும், கோவில்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மேடைதோறும் பேசி வருகின்றன.
அந்த வகையில், பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான திரைப்படம் அகண்டா. இப்படம், கடந்த ஆண்டு வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படத்தில், வரும் பெரும்பாலான காட்சிகள் ஹிந்துக்களின் மேன்மையையும், அவர்களின் வழிப்பாட்டு தலங்களின் புனிதத்தையும் எடுத்துக் கூறுவது போல் அமைந்து உள்ளது. அப்படத்தில் வரும் காட்சி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் லிங்க் இதோ.
இப்படத்தை பார்த்தாவது கோவில்களின் மேன்மையை தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.