பணிச்சுமை காரணமாக விக்னேஷ் மரணத்தை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை என திருமாவளவன் கூறியிருப்பதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க ஆட்சியில் அப்பாவி பொதுமக்கள் தமிழக காவல்துறையினரால் பாதிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு இதுவரை 6 லாக்கப் மரணங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பா.ஜ.க.வை தவிர அனைத்து ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் கட்சி தலைவர்கள் வழக்கம் போல கள்ள மெளனம். இப்படியாக, தொடர்கிறது இந்த விடியல் ஆட்சி.
அந்த வகையில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை சேர்ந்த மாணவர் மணிகண்டன் (வயது 21 ) காவல்துறையினர் விசாரணையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன். மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் காவல்துறையினர் விசாரணையில் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கடந்த 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில், சென்னை கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் (28), பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) வந்துள்ளனர். அவர்களின் ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, முன்னுக்குப் பின் முரணான வகையில் இருவரும் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மறுநாள் காலை 19.4.2022 அன்று விக்னேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். விக்னேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல்துறையினர் அடித்தே கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதனிடையே, தமிழ் மின்ட் இணையதள ஊடகத்திற்கு விக்னேஷ் தம்பிகள் உருக்கமுடன் பேசிய காணொளி கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் இருந்தது. என் அண்ணன் முகத்தை பார்த்த பொழுது, அவரின் வாய் கிழிந்த நிலையில் இருந்தது. இது எல்லாம் ரொம்ப தப்பு. ஒரு ஏழை இப்படி பண்றீங்க அதுவே ஒரு பணக்காரன் காரில் வந்திருந்தால், இப்படி செய்து இருப்பீர்களா என கண்ணீருடன் கேள்வி எழுப்பிய காணொளியை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.
பட்டியல் சமூகத்தின் தலைவராக தம்மை காட்டிக் கொள்ள முயலும் திருமாவளவன் விக்னேஷ் மரணம் குறித்து இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், பணிச்சுமையால் தான் போராட்டம் நடத்த முடியாமல் போனது என திருமாவளன் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.