விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை பார்க்க வந்த பெண்களை அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், பெண் விடுதலை, பெண் உரிமை, என் சாப்பாடு என் உரிமை என்று மேடைதோறும் பேசக் கூடியவர். அதே வேளையில், வழக்கத்தில் இல்லாத புத்தகத்தை மேற்கோள் காட்டி தமிழக பெண்களை கொச்சைப்படுத்தி இருந்தார். இப்படியாக, இவரது அருவருக்கதக்க பேச்சும் செயல்பாடுகளும் இருந்து வருகிறது.
ஒரு சிறந்த தலைவராக இருக்க வேண்டிய திருமா தம்மை பின்பற்றும் தொண்டர்களுக்கு ஒரு தவறான முன் உதாரணமாக இருந்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், முழுமையான விடுதலை சிறுத்தையாக இருக்க வேண்டுமானால் உன் மீது குறைந்தது 10 வழக்காவது பதிவாக வேண்டும் என்று அண்மையில் இவர் பேசிய காணொளி பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வி.சி.க.வின் பெண் தொண்டர்கள் கட்சி தலைவர் திருமாவளவனை பார்க்க வேண்டி வந்திருக்கின்றனர். அப்போது, அக்கட்சியின் நிர்வாகிகள் நீங்கள் எதற்கு தலைவரை பார்க்க வேண்டும். நீங்கள் பா.ஜ.க.? ஆர்.எஸ்.எஸ்.? அனுப்பிய ஆட்களா என்று அப்பெண்களிடம் வாக்குவாதம் செய்து விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.