தமிழகத்தில் கோவில்கள் கட்டப்படுவதே ஒரு வியாபாரம்தான் என்று ஹிந்துக்களை மீண்டும் இழிவுப்படுத்தும் வகையில் வி.சி.க. தலைவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் நன்கு அறிந்த மூத்த ஆபாச பேச்சாளர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார். தேர்தலில் வெற்றி பெறும் வரை ஹிந்து ஆலயங்களுக்கு செல்வார். வெற்றி பெற்ற பின்பு தமக்கு வாக்களித்த ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவார். இப்படியாக, தனது மனம் போன போக்கில் இவரது பேச்சுக்கள் இருந்து வருகின்றன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதற்கு ஏற்ப திருமாவின் நிலைப்பாடுகள் இருக்கும். நான், ஒரு ஹிந்து அம்மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று கூறுவார். அதேபோல, நான் ஒரு கிறிஸ்தவன் அந்த மதத்தை பின்பற்றி வருகிறேன் என்று பேசுவார். அப்படி ஒரு உருட்டு, இப்படி ஒரு உருட்டு, என்பதே அவரின் நிலைப்பாடு.
இதனிடையே, திருக்குறள் பற்றிய புரட்சி நூல்’ வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நவ., 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைத்தார். அந்த வகையில், ஈசன் தான் ஏசு பிரான் என்றும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர் என்று கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், பாசறை முரசு இதழின் ஆசிரியர் மு.பாலன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு திருமாவளவன் பேசும் போது, தமிழகத்தில் கோவில்கள் கட்டப்படுவதே ஒரு வியாபாரம் தான் என்று பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தும் இவர் எல்லாம் ஒரு தலைவரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.