மதமாற்றத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார். தேர்தல் சமயத்தில் ஹிந்துக்களை புகழ்வதும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அதே மக்களை இகழ்வதையும் வாடிக்கையாக கொண்டவர். மேலும், ஹிந்துக்கள் நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் சடங்கு, சம்பிரதாயங்கள் பற்றி திரித்து பேசுவதையே வழக்கமாக கொண்டு இருக்கிறார். உதாரணத்திற்கு, திருக்குறள் பற்றிய புரட்சி நூல்’ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருமா, ஈசன் தான் ஏசுபிரான் என்றும் திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர் என வாய்க்கு வந்ததை அள்ளி தெளித்திருந்தார்.
திருவள்ளுவர் பிறந்தது தமிழ்நாடு, ஏசுபிரான் பிறந்தது எந்த நாடு இருவரையும் எப்படி? ஒப்பிட்டு பேசலாம் என திருமாவை பலர் சாடி இருந்தனர். இவரின், பேச்சு ஹிந்துக்களிடையே குழப்பத்தை உருவாக்கி அதன்மூலம் மதமாற்றம் செய்யும் முயற்சியாக? இது இருக்க கூடும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஊடகமான தந்தி டி.விக்கு அண்மையில் திருமாவளவன் பேட்டியளித்து இருக்கிறார். அந்த பேட்டியில், நெறியாளர் அசோகவர்த்தினி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார் ;
ஹிந்துவாக இருக்கும் வரை நீ இப்படிதான் இருப்பாய் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் வேறு மதத்திற்கு சென்றால் மாறி விடுவார்களா? அங்கேயும் அப்படி தானே இருக்கு என்று நெறியாளர் அசோகவர்த்தினி கேட்கிறார். அதற்கு, திருமாவளவன் அதனால் ஒன்றும் தப்பில்லையே என்று கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.