வி.சி.க. தலைவர் திருமாவின் தண்ணீர் அரசியல் சரமாரியாக கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்.
விடுதைலச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவரது, பேச்சுக்கள், எழுத்துக்கள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலேயே அமைந்து இருக்கும். குறிப்பாக, ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்துவதையே தனது தொழிலாக கொண்டவர். இப்படியாக, இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதுதவிர, அவ்வபோது தமிழர்களிடம் மொழி உணர்வை தூண்டி விடுவதை வாடிக்கையாக கொண்டவர்.
இப்படிப்பட்ட சூழலில், திருமாவளன் தனது ட்விட்டர் பதிவில், சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரைப் ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம் ?!?! இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு- ஒரே மொழி -ஒரே கலாச்சாரம் என்கிற பன்மைத்துவத்துக்கு எதிரான சங்-பரிவார்களின் சூதுநிறை அரசியலே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
குடிநீர் பாட்டிலுக்கு எப்படி? பாணி என்று பெயர் சூட்டலாம் என்று கேட்க தெரிந்த திருமாவிற்கு, சன் டிவி, ரெட் ஜெயண்ட் மூவிஸ், சன்ஷைன் என எப்படி? பெயர் வைக்கலாம் என்று தி.மு.க.வை பார்த்து அவர் கேட்பாரா? திருமதி துர்கா ஸ்டாலின் நடத்துவதாக கூறப்படும் SPRINGS மினரல் வாட்டர் கம்பெனி குறித்து வாய் திறப்பாரா? என நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.