விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஒருவர் விசிறி விட்டு கொண்டிருந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் திருமாவளவன். இவர், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். சமூக நீதி, சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சகோதரத்துவம் என்று ஊர் முழுக்க அறிவுரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். இந்த, அறிவுரைகள் மற்றவர்களுக்கு தான் தமக்கு அல்ல என்பதில் மிகவும் உறுதியாக நிற்க கூடியவர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக, திருமாவின் இந்த செயலை குறிப்பிட்டு சொல்லலாம். அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில், திருமாவின் அலுவலகத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. டிப் டாப் உடையில் இருந்த திருமா மழை நீரில் கால் வைக்க தயக்கம் காட்டி இருக்கிறார். இதையடுத்து, இரும்பு சேர் மீது திருமாவளவன் நிற்க அதனை தொண்டர்கள் இழுத்து சென்ற சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழலில், பழங்குடி இருளர் மனித உரிமைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேச முற்படுகையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நடப்பது விடியல் ஆட்சி என்பதால் அவரால் மேற்கொண்டு எதுவும் கூற முடியவில்லை. ஓடிய அணில் எப்போது வரும் என்று அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக, என்ன செய்வது என்று தெரியாமல் வி.சி.க. தலைவர் திரு திரு என்று விழித்திருக்கிறார்.
இதையடுத்து, திருமாவின் அருகில் இருந்த ஒருவர் தனது கைகளில் இருந்த தாள்களை கொண்டு அவருக்கு விசிறி விட்டு இருக்கிறார். ஒரு நல்ல தலைவராக, இருந்திருந்தால் என்ன செய்து இருப்பார். எனக்கு மட்டுமா வியர்க்கிறது? உங்களுக்கும் தானே வியர்க்கிறது. நீங்கள் எனக்கு விசிறி விட வேண்டாம் என்று கூறியிருப்பார். இதே இடத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இருந்திருந்தால் இதே வார்த்தையை தான் கூறியிருப்பார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
விசிறி விடுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த திருமாவளவன் இனிமேல் சமூகநீதி பற்றி பேசாமல் இருப்பது தான் உசிதம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.