இந்து மதம் வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதிப்பது அவசியமில்லாதது. இது நமக்கு எதிராகவே முடியும் என திருமாவிற்கு மறைமுகமாக சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆடுகளம் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இதையடுத்து பேசிய இயக்குனர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும், ராஜ ராஜ சோழனை ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்த மன்னராக காட்ட முயற்சி நடைபெறுகிறது. இது தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் காட்ட முயற்சி மேற்கொள்ளபடுகிறது என்று தெரிவித்து இருந்தார்.
வெற்றிமாறனின், அபத்தமான இந்த கருத்து. ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இயக்குனரின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, இச்சம்பவம் ஊடகங்களில் விவாத பொருளாக மாறியிருந்தது. இதனை தொடர்ந்து, திரைப்பட இயக்குனர் பேரரசு, திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் வெற்றிமாறனுக்கு தரமான பதிலடியை வழங்கியிருந்தனர்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டு, கழக கண்மணிகளின் அட்டூழியம் என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து, எல்லாம் பேச வேண்டிய திருமாவளவன், தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை. ராஜ ராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதம் இல்லை என்பது போல பேசியிருந்தார். இதுதவிர, சைவம் வைணவம் என இரு அறநிலையத்துறைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வாறு, குறிப்பிட்ட ஒரு மதத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் விமர்சனம் செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நியூஸ் 18 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இந்து மதம் வேண்டுமா? வேண்டாமா? என்று விவாதிப்பது அவசியமில்லாதது. இது நமக்கு எதிராகவே முடியும். மக்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டார்கள் என திருமாவளவனின் தலையில் ஓங்கி கொட்டும் விதமாக அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.