மசூதிக்கு சீல்: இஸ்லாமியர்களை தூண்டிவிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

மசூதிக்கு சீல்: இஸ்லாமியர்களை தூண்டிவிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

திருப்பூரில் ஐகோர்ட் உத்தரவிட்டும், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் மசூதிக்கு சீல் வைக்க வேண்டாம் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் கடிதம் எழுதி இருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் வேலாம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக மசூதி ஒன்று கட்டப்பட்டது. ஆகவே, இந்த மசூதியை மூட வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் 2014-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், மேற்கண்ட மசூதியை மூடி சீல் வைக்கும்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதையடுத்து, மசூதிக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றனர். ஆனால், அப்பகுதி முஸ்லீம்களோ மசூதியை சீல் வைக்க விடாமல் தடுத்ததோடு, மசூதிக்குள் இருந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மசூதிக்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்திருக்கும் தகவலை திருப்பூர் பகுதியிலுள்ள இதர மசூதிகளுக்கும், இஸ்லாமிய வாட்ஸ் ஆப் குரூப்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கினார்கள் இஸ்லாமியர்கள். இதையறிந்த இஸ்லாமியர்கள் திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, திருப்பூர் – தாராபுரம் சாலையிலுள்ள உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். பிறகு, அங்கிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக மாநகராட்சி நோக்கி பேரணியாகச் சென்றனர்.

பின்னர், மாநகராட்சி சிக்னல் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல திருப்பூர் மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. குறிப்பாக, பள்ளி முடிந்து திரும்பிய குழந்தைகளின் வாகனங்களும் சிக்கிக் கொண்டன. இதனால், குழந்தைகளின் நிலை என்னவானதோ என்று பெற்றோர் கலக்கமடைந்தனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், போலீஸாரும் பொதுமக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து மசூதிக்கு சீல் வைப்பதைவிட்டு விட்டு, மசூதிக்கு சீல் வைத்தால் இஸ்லாமியர்களிடையே பதட்டமான சூழல் உருவாகும் என்று சொல்லி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதாவது, இஸ்லாமியர்களை மறைமுகமாக தூண்டிவிடும் வேலையை செய்திருக்கிறார். இதுதான் ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, விதிமீறல், ஆக்கிரமிப்பு என்று சொல்லி நூற்றுக்கணக்கான ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டது. அப்போது ஹிந்துக்களின் உணர்வுகள் புண்பட்ட போது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று வீரவசனம் பேசி கோயிலை இடித்தவர்கள், தற்போது மசூதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தாமல் இருப்பது எந்த வகையில் நியாயம். ஆகவே, நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த விடாமல் தடுத்தவர்கள் மீதும், இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வகையில் கடிதம் எழுதிய எம்.எல்.ஏ. செல்வராஜ் மீதும் தமிழக அரசும், காவல்துறையும், நீதிமன்றமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

Image


Share it if you like it