”பொறுங்க..!! ”பொறுங்க.!! அது போன ஆட்சியில் பா.ரஞ்சித் வைத்த விமர்சனம்.
சத்தியவாணி முத்து நகர் பகுதியில் உள்ள 370-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைகளை அகற்றினர் அதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக கூவம் நதியில் இறங்கி போராடினர். போராட்டத்தில் இறங்கிய மக்களை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்து இருந்தார் இயக்குநர் பா. ரஞ்சித்.
இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பா. ரஞ்சித், அப்பொழுதைய அ.தி.மு.க அரசு குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.
“சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறுகணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதல்வர் அவர்கள் விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு நமக்கு எதிரான அரசு” என்று முந்தைய அ.தி.மு.க ஆட்சி குறித்து காட்டாக விமர்சனம் செய்து இருந்தார்.
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த பட்டியல் இன மக்களின் வீடுகளை இடித்து அண்மையில் தி.மு.க அரசு அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வரை அப்பகுதி மக்களை சந்திக்கவோ, தி.மு.க அரசுக்கு எதிராகவோ தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்காதது ஏன்? அப்பாவி பட்டியல் சமூக மக்களை தூண்டி அதன் மூலம் குளிர் காயும் பா.ரஞ்சித், போன்றவர்களின் உண்மையான சுயரூபத்தை அச்சமூக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்ட துணை முதல்வர் @OfficeOfOPS அவர்கள்😡😡. விழித்துக் கொள்ளுங்கள் சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு #நமக்கு_எதிரான_அரசு
— pa.ranjith (@beemji) December 10, 2020
தலித் மக்களை ரோட்டில் நிற்க வைத்த விடியல்.. pic.twitter.com/ozqq6KUUGF
— 😇 (@Nallavan6666) July 30, 2021
இடிக்கப்பட்ட வீடுகள் தோறும் நாம் பெரிதும் மதிக்கும்
சட்ட மேதை அம்பேத்கர் புகைப்படம்அம்பேத்கர் படத்தை படத்தில் வைத்து மக்களை ஏமாற்றி கோடிகளில் புரளும் இயக்குநர் வாய் திறக்காமல் மவுனம். 😟
இதைத்தான் எளியவர்களுக்கு பேசும் அரசியல் என்று உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். pic.twitter.com/DJX5RHKEhk
— Rangamannar (@rangamannarji) July 31, 2021