வெடிகுண்டு வீசி ஆளுநரை கொல்ல பார்த்தது சதி இல்லையெனில் விளையாட்டுக்கா –  நெட்டிசன்கள் கேள்வி  ?

வெடிகுண்டு வீசி ஆளுநரை கொல்ல பார்த்தது சதி இல்லையெனில் விளையாட்டுக்கா – நெட்டிசன்கள் கேள்வி ?

Share it if you like it

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிதாக்குதல் நடத்தி கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் என்பவனை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வந்தது. இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர் ஆளுநர்கள் யாரும் அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது. யாரோ ஒருத்தன் ராஜ் பவன் முன்னாடி பெட்ரோல் குண்டு போட்டதை சதி, கிதினு பேசிட்டு இருக்காங்க என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய ஜனாதிபதி வரும் சமயத்தில், தமிழக ஆளுநர் தங்கியிருக்கும் ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசி ஒருவன் ஆளுநரை கொலை செய்ய பார்த்துள்ளான். இதை மிகவும் சர்வ சாதாரணமாக எஸ்.வி சேகர் சதி எதுவும் இல்லை என்று திமுக விற்கு ஆதரவாக பேசுகிறார். தற்போது படவாய்ப்பு இல்லை என்று எஸ்.வி சேகர் இதுபோல் சர்ச்சையாக பேசி மாட்டிக்கொள்கிறார். ஆளுநர் வீட்டில் குண்டு வீசியதில் சதி இல்லையென்றால் சும்மா விளையாட்டுக்கு குண்டு வீசி ஆளுநரை கொலை செய்ய பார்த்தனா என்று நெட்டிசன்கள் எஸ்.வி சேகர் அவரை சமூக வளைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it