நள்ளிரவில் கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய ரவுடி கும்பல்… தி.மு.க. ஆட்சியில் சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நள்ளிரவில் கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய ரவுடி கும்பல்… தி.மு.க. ஆட்சியில் சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

Share it if you like it

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே, சட்டம் ஒழுங்கு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. அந்த வகையில், நள்ளிரவில் கத்தியைக் காட்டி பெண்களை மிரட்டும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி வருகிறது. நாளுக்கு ஒரு கொலை அரங்கேறி வருவதோடு, கொள்ளை, ரவுடியிசம் உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. மாணவர்கள் முதல் ரவுடிகள் வரை சர்வசாதாரணமாக கத்தியுடன் உலா வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில், நள்ளிரவில் பெண்கள் மட்டுமே வசிக்கும் வீட்டில் புகுந்த ரவுடி கும்பல் ஒன்று கத்தியைக் காட்டி மிரட்டிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா. இவரது கணவர் தாமோதர கண்ணன், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். எனவே, லாவண்யா தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லாவண்யாவின் எதிர் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி ஒன்று திருடு போயிருக்கிறது. ஆகவே, கோழியை திருடியது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக, லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை எதிர் வீட்டினர் கேட்டிருக்கிறார்கள். லாவண்யாவும் கொடுக்கவே, அக்காணொளியை ஆதரமாக வைத்து, எதிர் வீட்டினர் கோவில்பட்டி மேற்கு காவல்துறையில் புகார் கொடுத்தனர். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விஷயம் கோழி திருடிய கும்பலுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால், ஆத்திரமடைந்த அக்கும்பல், கடந்த 24-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் லாவண்யா வீட்டிற்குச் சென்று, ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், வீட்டின் வெளியே இருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் லைட்டுகளை அக்கும்பல் அடித்து நொறுக்குகிறது. சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யாவின் தாயாரையும், லாவண்யாவையும் அக்கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டுகிறது. வீட்டின் கேட் வெளியே நின்று மிரட்டிய அக்கும்பல், ஒரு கட்டத்தில் சுற்றுச்சுவர் மீது ஏறி, வீட்டின் போர்டிகோவில் நின்றிருந்த கார் மீது ஏறி, போலீஸாருக்கு எப்படி சி.சி.டி.வி. காட்சிகளை கொடுக்கலாம் என்று கேட்டு மிரட்டுகிறார்கள், இக்காட்சிகள் அனைத்தும், வீட்டின் வாசற்படியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இதையடுத்து, சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக வைத்து லாவண்யா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் மேற்கு காவல் துறையினர் மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் தி.மு.க. ஆட்சியில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு அவலத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it