தமிழக நிதியமைச்சரின் குடும்ப வரலாறு என்னவென்பது திருமாறன் கூறிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தமிழக நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், தாம் மட்டுமே அதிகம் படித்து இருப்பதாகவும், எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ரீதியில் பேசக்கூடியவர். மேலும், கேள்வி கேட்கும் நிருபர்களை மட்டம் தட்டுவதையே நோக்கமாக கொண்டவர். இதுதவிர, என் தாத்தா யார் தெரியுமா? என் அப்பா யார் தெரியுமா? என் படிப்பு என்ன தெரியுமா? என் குடும்ப பின்னணி என்னவென்று தெரியுமா? என குடும்ப புராணத்தை பாடுவதையே வழக்கமாக கொண்டவர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் பி.டி.ஆர். குடும்ப வரலாறு குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார்;
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் கமிட்டி தலைவராக இருந்தவர் பி.டி. ராஜன். அப்போது, யாகத்தில் போடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த தங்க மற்றும் வெள்ளி காசுகளில் அவர் எப்படி? எல்லாம் ஊழல் செய்து இருக்கிறார் என 96 பக்கம் கொண்ட சத்திய மோகன் எழுதிய புத்தகத்தில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உங்க தாத்தாவின் வரலாறு இதுதான் என திருமாறன் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.