திரிணமுல் காங்., முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.,வுமான சித்திக்குல்லா சவுத்ரி, வரும் சட்டசபை தேர்தலில், சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத சூழல் காரணமாக, போட்டியிட மறுத்துஉள்ளார்.
நந்திகிராம் போராட்டத்தில், மம்தாவின் வலது கரமாக விளங்கியவர், சித்திக்குல்லா சவுத்ரி. இவர், மேற்கு வங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திரிணமுல் காங்.,கில் இருந்து சமீபத்தில் பல முக்கிய தலைவர்கள் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில், சித்திக்குல்லா சவுத்ரியின் முடிவு, மம்தாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது