ராஜினாமா கடிதத்தை மம்தா பானர்ஜியிடம் சமர்ப்பித்த டிஎம்சி எம்.பி மிமி சக்ரவர்த்தி !

ராஜினாமா கடிதத்தை மம்தா பானர்ஜியிடம் சமர்ப்பித்த டிஎம்சி எம்.பி மிமி சக்ரவர்த்தி !

Share it if you like it

நேற்று (பிப்-15) பெங்காலி திரைப்பட நடிகையும், மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பியுமான மிமி சக்ரவர்த்தி தனது தொகுதியில் உள்ள உள்ளூர் கட்சித் தலைமைக்கு அதிருப்தி தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அவர் தனது ராஜினாமா கடிதத்தை டிஎம்சி தலைவர் மம்தா பானர்ஜியிடம் சமர்ப்பித்துள்ளார், இருப்பினும், ராஜினாமா இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மிமி சக்ரவர்த்தி தனது ஜாதவ்பூர் தொகுதி மற்றும் உள்ளூர் தலைமை குறித்து மகிழ்ச்சியடையவில்லை என்றும் உள்ளூர் தலைவர்களிடமிருந்து தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, இரண்டு நிலைக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து மிமி சக்ரவர்த்தி ராஜினாமா செய்தார். மிமி சக்ரவர்த்தி தனது மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சுகாதார மைய அமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்திருந்தார். ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நல்முடி மற்றும் ஜிரஞ்சா பிளாக் ஆரம்ப சுகாதார நிலைய ரோகி கல்யாண் சங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த ராஜினாமாவுக்குப் பிறகு, அவரது அடுத்த நகர்வு குறித்த ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் வலுப்பெற்றன. இறுதியாக, அவர் வியாழன் அன்று (15 பிப்ரவரி 2024) தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.


Share it if you like it