போதைப்பொருள் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளது. ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு மற்றும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் பல முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில் ஜாபர் சாதிக் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து திரைப்பட இயக்குனர் அமீருக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாபர் சாதிக் சகோதரர் மைதீன் வங்கி கணக்கிலிருந்து சில முக்கிய புள்ளிகளுக்கு சுமார் 21 கோடி ரூபாய் பணம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை அமலாக்க துறையினர் கண்டுபிடித்தனர். அந்த முக்கிய புள்ளிகளின் விவரங்களை வழக்கின் விசாரணை பாதிக்கக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் வெளியிடாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தை பேரிச்சை பழம் இறக்குமதி வியாபாரத்தில் சம்பாதித்ததாக ஜாபர் சாதிக் கணக்கு காட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதிலிருந்து போதைப்பொருள் விற்று சம்பாதித்த பணத்தை வைத்துதான் அமீர் முதல் சில முக்கிய புள்ளிகளுக்கு வழங்கினார் என்றால், ஜாபர் சாதிக் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கிய நிதி போதைப்பொருள் மூலம் வந்த நிதியா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.