கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் நமது #DravidianModel அரசு உருவாக்கும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யவும் – உங்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று அவற்றைச் செம்மைப்படுத்தவும் #நீங்கள்_நலமா திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக தமிழக முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டு 15வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் 15 நாட்களாக நீடித்தும் அரசுத் தரப்பில் இதுவரை முதல் கட்ட பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை எனவும், தொடர்ந்து கைது செய்வதிலேயே தீவிரம் காட்டுவதாகவும், அரசுத் தரப்பில் விரைந்து அழைத்துப் பேசி கோரிக்கை குறித்து ஒரு நல்ல முடிவை எட்ட வேண்டும் எனவும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து கைகளில் நாங்கள் நலமா இல்லை என்கிற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியபடி போராடி வருகின்றனர்.
வேங்கைவாசல் விவகாரம் நடந்து ஒரு வருடம் மேல் ஆகிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் போதைபொருள் கடத்தல் அதிகமாகி விட்டது. அதில் குற்றவாளியாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர் தான் இருக்கிறார். விலைவாசி உயர்ந்துவிட்டது, மின் கட்டணம் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முதல்வரின் இந்த திட்டத்தை விமர்சிக்கும் வகையில் #நாங்கநலமாஇல்லை_ஸ்டாலின் என்கிற ஹாஷ்டாக்கை சமூக வலைதளவாசிகள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.