அடேங்கப்பா… திரிணாமுல் காங்., வருவாய் இவ்வளவா? திகைக்க வைக்கும் தேர்தல் ஆணைய ஆடிட் ரிப்போர்ட்!

அடேங்கப்பா… திரிணாமுல் காங்., வருவாய் இவ்வளவா? திகைக்க வைக்கும் தேர்தல் ஆணைய ஆடிட் ரிப்போர்ட்!

Share it if you like it

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கடந்தாண்டு வருவாய் 545.74 கோடி என்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல் அனைவரையும் வியக்கவும், திகைக்கவும் வைத்திருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் மம்தா பானர்ஜி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்தார். மேலும், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் இருந்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கப்பட்டார். வெளியே வந்த கையோடு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். இக்கட்சி 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், கடந்த நிதியாண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மொத்த வருமானம் 545.74 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது, அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது வருடாந்திர தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில், 2021 – 2022-ம் ஆண்டில் கட்சியின் மொத்த வருமானம் 545.74 கோடி ரூபாயாக இருந்தது. இதில், 96 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானம், அதாவது 528.14 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலமாகவும், 14.36 கோடி ரூபாய் முதன்மை உறுப்பினர்களிடமிருந்து கட்டணம்/சந்தாக்கள்/சேகரிப்புகள் மூலமாகவும் கிடைத்திருக்கிறது. மீதமுள்ளவை வங்கி வைப்புத்தொகைக்கான வட்டி மற்றும் பிற கட்சி உறுப்பினர்களின் நன்கொடையிலிருந்து வந்தது.

முந்தைய நிதியாண்டான 2020 – 2021-ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் 42 கோடி ரூபாய் வருமானமாக அறிக்கை காட்டுகிறது. அதேசமயம், அக்கட்சியின் செலவு 2020 – 2021ல் 132.52 கோடி ரூபாயிலிருந்து 2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிதியாண்டில் 2021 – 2022-ல் 268.33 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. 2021 – 2022-ல் வெறும் 135.12 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்கு சென்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஆண்டில் எப்படி இவ்வளவு உயர்ந்தது என்பதுதான் அனைவருக்கும் வியப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வின் வருமானத்தை பற்றி கேள்வி கேட்கும் யாரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வருவாயை பற்றி கேள்வி எழுப்பாமல் மவுனம் காத்து வருகின்றனர்.


Share it if you like it