பட்டாசு தொழிலாளர்களின் நலனின் இரட்டை நிலைப்பாட்டை கொண்டு இருக்கும் டி. ஆர்.பி. ராஜாவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. ஐ.டி. விங் மாநிலச் செயலாளராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவர், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகன். மேலும், இவர் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். ராஜாவை பொறுத்தவரை அடாவடி பேர்வழி என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தினர். இதன் காரணமாகவே, மன்னார்குடி தொகுதியில் தொடர்ச்சியாக 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வுபெற்றும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்கிறார்கள். சும்மாவே ட்விட்டரில் கம்பு சுற்றும் இவர், தி.மு.க. ஐ.டி. விங் செயலாளர் பதவி கிடைத்ததும் கொஞ்சம் அதிகமாக சுற்றி வருகிறார். பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுவதில் இவருக்கு நிகர் இவரே என்பது பலரின் கருத்து.
அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அரசை ட்விட்டரில் விமர்சனம் செய்வதையே தனது முழுநேர தொழிலாக கொண்டவர். இவர், தனது தொகுதி மக்களுக்கு செலவிடும் நேரத்தைவிட ட்விட்டரில் செலவிடும் நேரம் அதிகம் என்பதே நிதர்சனம். இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பட்டாசு வாங்கி அதிகம் வெடிங்க என்று மக்களிடம் அன்புடன் கேட்டு கொண்டார். இதற்கு, பட்டாசு தொழிலாளர்கள் உட்பட பலர் அவரின் கருத்தை வரவேற்று இருந்தனர்.
இதற்கு, டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது ; ஒரு நாள் தானே என்று சொன்னவர்களுக்கு சென்னை காற்றில் இருக்கும் மாசின் அளவு (நுரையீரல் பாதிப்பை விளைவிக்கும் PM 2.5) 21.4 மடங்கு அதிகமாக உள்ளது. சுவாசப் பிரச்சினைகள் காரணமாக பல்லாயிரம் நபர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கொண்டாடுங்கள் கொன்று விடாதீர்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதே டி. ஆர்.பி. ராஜா கடந்த 2020 ஆம் ஆண்டு பட்டாசு தொழிலாளர்கள் குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவு இதோ ; எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் என்று பல மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை விதித்திருப்பது நமது மாநில பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு பெருத்த இடியாக வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு பலரையும் பட்டாசுகளை வாங்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
மிகவும் ஆபத்தான சூழலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்வது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. தொழிலாளர்களையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்றும் வகையில் திமுக அரசில் தலைவர் ஸ்டாலின் நிச்சயம் தீர்வு காண்பார் என குறிப்பிட்டு இருக்கிறார்.